டில்லி

ந்தியா குரங்கு அம்மைக்குத் தடுப்பூசி தயாரிக்க வாய்ப்புள்ளதாக மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறியுள்ளார்.

தற்போது டில்லியில் நடைபெற்று வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் இன்று குரங்கு அம்மை குறித்த விவாதம் நடந்தது.  மாநிலங்களவையில் நடந்த இந்த விவாதத்தில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கலந்து கொண்டு உரையாற்றினார்.

அவர் தமது உரையில்,

”இந்திய அரசு குரங்கு அம்மை தொடர்பாக விழிப்புணர்வை அரசாங்கம் ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரசை எதிர்கொண்டதில் இருந்த அனுபவத்தைக் கொண்டு குரங்கு அம்மையைக் கண்காணிக்க மத்தியக் குழு அமைத்துள்ளது.  இந்தியாவிலும், உலகிலும் இது புதிய நோய் அல்ல.  இந்த வைரஸ் 1970 களில் இருந்தே பாதிப்பை உலகம் எதிர்கொண்டுள்ளது. 

பொதுமக்கள் குரங்கு அம்மை குறித்து அச்சப்படத் தேவையில்லை. மாநில அரசுகளுடன் இணைந்து நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. இதற்கான சரியான தடுப்பூசியைக் கண்டறிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குரங்கு அம்மை வைரசை நமது விஞ்ஞானிகள் தனியாக அடையாளம் கண்டு பிரித்ததால் அவர்கள் விரைவில் குரங்கு அம்மைக்குத் தடுப்பூசி கண்டுபிடிக்க வாய்ப்பு உண்டு”

எனத் தெரிவித்துள்ளார்.