பர்மிங்காம்:
காமன்வெல்த் பளுதூக்குதல் போட்டியில் இந்திய வீராங்கனை ஹர்ஜிந்தர் கவுர் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.

22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த காமன்வெல்த் போட்டியில் இந்தியா இதுவரை 3 தங்கம், 3 வெள்ளி, 3 வெண்கலம் என 9 பதக்கங்களை வென்று 6-வது இடத்தில் நீடிக்கிறது.

இந்நிலையில், நேற்று நடந்த மகளிருக்கான 71 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீராங்கனை ஹர்ஜிந்தர் கவுர் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.

இதையடுத்து காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் இந்தியா மூன்று தங்கப் பதக்கங்களும், மூன்று வெள்ளி பதக்கங்களும் மற்றும் மூன்று வெண்கல பதக்கங்களும் வென்றுள்ளதால் இது வரை இந்தியா வென்றுள்ள மொத்த பதக்கங்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.