டில்லி
இந்தியா முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் எண்ணிக்கை குறித்து மத்திய அரசு அறிவித்துள்ளது.
தற்போது நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் மக்களவை உறுப்பினர் ஒருவர் நாடெங்கும் உள்ள நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து கேள்விகள் எழுப்பி இருந்தார். இதற்கு மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ எழுத்து மூலம் பதில் அளித்தார்.
அந்த பதிலில்
“இந்த மாதம் 1 ஆம் தேதி நிலவரப்படி உச்சநீதிமன்றத்தில் 72 ஆயிரத்து 62 வழக்குகள் நிலுவையில் உள்ளன. உயர்நீதிமன்றங்களில் கடந்த 25-ந் தேதி நிலவரப்படி 25 59 லட்சத்து 55 ஆயிரத்து 873 வழக்குகள் நிலுவையில் உள்ளன. தவிர மாவட்ட நீதிமன்றங்கள் மற்றும் கீழ்க்கோர்ட்டுகளில் 4 கோடியே 23 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
மொத்த்ட்தில் அனைத்து நீதிமன்றங்களிலும் நிலுவையில் உள்ள வழக்குகள் எண்ணிக்கை 4 கோடியே 83 லட்சம் ஆகும். அதாவது இது 5 கோடியை நெருங்கி வருகிறது. இந்த நிலுவை வழக்குகளை முடிப்பது நீதித்துறையின் அதிகார வரம்புக்கு உட்பட்டது என்பதால் அரசுக்கு பங்கில்லை. மேலும் வழக்குகளை முடிக்கக் காலவரையறை எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. இவ்வாறு வழக்குகள் தேங்குவதற்கு நீதிபதிகள் பற்றாக்குறை, வாய்தா உள்பட பல காரணங்கள் உள்ளன”
என அமைச்சர் தெரிவித்துள்ளார்.