சென்னை:
மிழ்நாட்டில் யாருக்கும் குரங்கம்மை பாதிப்பு இல்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

குரங்கம்மை பாதிப்பை பொது சுகாதார அவசரநிலையாக உலக சுகாதார அமைப்பு அறிவித்திருக்கிறது. உலக அளவில் குரங்கம்மை பாதிப்பு அதிகரித்து வருவதையடுத்து இதை உயரிய எச்சரிக்கையுடன் இருக்கும் நோய் பாதிப்பாக அந்த அமைப்பு வகைப்படுத்தியிருக்கிறது.

இந்தியாவிலும் குரங்கம்மை நோய் பரவ துவங்கியுள்ளது. கேரளாவில் 3 பேர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், டெல்லியிலும் ஒருவருக்கு குரங்கம்மை உறுதியாகி உள்ளது.

அவர் வெளிநாடு பயணம் ஏதும் மேற்கொள்ளாத நிலையில் குரங்கம்மை பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து, இந்தியாவில் குரங்கம்மை நோய் பாதிப்பு எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவிக்கையில், தமிழ்நாட்டில் யாருக்கும் குரங்கம்மை பாதிப்பு இல்லை என்று தெரிவித்துள்ளார்.