சென்னை: கடந்த அதிமுக ஆட்சியின்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய குட்கா வழக்கில், தொடர்புடைய முன்னாள் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மீது வழக்குப்பதிய சிபிஐக்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளித்து உள்ளது. இதனால், எடப்பாடி தரப்பு அதிர்ச்சி அடைந்துள்ளது.
தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்டுள்ள குட்கா பொருட்களை தடையை மீறி விற்பனை செய்தத தொடர்பான வழக்கில், முன்னாள் அமைச்சர்கள், அதிகாரிகள் உடந்தை யாக இருந்ததாக திமுக குற்றம் சாட்டியது. இந்த முறைகேடு மூலம் அப்போதைய அமைச்சர்கள், ரமணா, விஜயபாஸ்கர் மற்றும் அதிகாரிகள் பல கோடி ரூபாய் ஊழல் செய்து சம்பாதித்ததாக கூறப்பட்டது.
குறிப்பாக சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், முன்னாள் டி.ஜி.பி டி.கே.ராஜேந்திரன், சென்னை மாநகர முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் உள்ளிட்ட மூத்த அதிகாரிகள், பல்வேறு துறைகள் ஆகியவற்றுக்குத் தொடர்பு இருப்பது அம்பலமானது. இது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீஸார் விசாரணை மேற்கொண்ட நிலையில், இந்த வழக்கை நீதிமன்றம் பின்னர், சி.பி.ஐ-க்கு மாற்றி உத்தரவிட்டது.
ஆனால், இந்த முறைகேடு தொடர்பான வழக்கை விசாரிக்க கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் சிபிஐக்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், தற்போது வழக்கை விசாரிக்க அனுமதி கோரி தமிழக அரசின் தலைமைச் செயலாளர் இறையன்புக்கு கடிதம் எழுதி உள்ளது. , அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் சி.விஜய பாஸ்கர், பி.வி.ரமணா, முன்னாள் போலீஸ் அதிகாரிகள் டி.கே.ராஜேந்திரன், ஜார்ஜ் உள்ளிட்ட 12 பேர் மீது வழக்கு பதிவுசெய்ய அனுமதிக்கக் கோரி தமிழ்நாடு அரசுக்கு சி.பி.ஐ கடிதம் எழுதியிருக்கிறது.
முன்னாள் அமைச்சர்கள், ஐ.பி.எஸ் அதிகாரிகள் மீது வழக்கு பதிய மாநில அரசின் அனுமதி தேவை என்பதால், சி.பி.ஐ கடிதம் எழுதியிருக்கிறது. ஏற்கெனவே, கொடநாடு வழக்கு, லஞ்ச ஒழிப்புத்துறையின் சோதனை மூலம் தி.மு.க அரசு எங்களைப் பழிவாங்கத் துடிக்கிறது. இப்போது மத்திய பா.ஜ.க-வுடன் சேர்ந்து குட்கா வழக்கைக் கையில் எடுத்திருக்கிறது.
இதையடுத்து குட்கா வழக்கை விசாரிக்க தமிழகஅரசு சிபிஐக்கு அனுமதி வழங்கி உள்ளது. இதனால், அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் வணிக வரித்துறை அமைச்சர் ரமணா, காவல்துறை முன்னாள் டிஜிபிக்கள் ஜார்ஜ், டி.கே.ராஜேந்திரன் உள்ளிட்ட சில அதிகாரிகளுக்கும் சிக்கல் எழுந்துள்ளது.
குட்கா ஊழல் தொடர்பாக அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரை மையமாகவைத்து எடப்பாடியை வளைக்க மத்திய பா.ஜ.க அரசு திட்டமிட்டிருக்கிறதா என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.