டெல்லி: நாட்டின் 14வது குடியரசுத் தலைவராக உள்ள  ராம்நாத் கோவிந்த்துக்கு நேற்று நாடாளுமன்றம் சார்பில் பிரிவுபசார விழா நடைபெறுகிறது. வரும் 25ந்தேதி நாட்டின் 15வது குடியரசு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரவுபதி முர்மு பதவி ஏற்பு விழா நடைபெறுகிறது.

முழுமையான 5 ஆண்டுகள் பதவிக்காலத்தை நிறைவு செய்து வரும் 24ம் தேதியுடன் பதவியில் இருந்து விடை பெறுகிறார் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த். அவருக்கு  நாடாளுமன்றம் சார்பில் இன்று பிரிவுபசார விழா நடைபெறுகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர். கூட்டணி கட்சி தலைவர்களும் கலந்துகொண்டனர்.

இதைத்தொடர்ந்து நாட்டின் 15வது குடியரசு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரவுபதி முர்மு நாளை மறுதினம் (ஜூலை 25ஆம் தேதி)  பொறுப்பேற்கிறார். நாடாளுமன்றத்தில் நடைபெறும் பதவியேற்பு விழாவில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.

முன்னதாக  ஜூலை 18ஆம் தேதி நடைபெற்ற குடியரசுத் தலைவர் தேர்தலில் திரௌபதி முர்மு, 64 சதவீதம் வாக்குகள் பெற்றிருந்தார். தேர்தலில் மொத்தம் பதிவான 4754 வாக்குகளில் 53 வாக்குகள் செல்லாததாக அறிவிக்கப்பட்டது. 4701 வாக்குகள் வாக்கு எண்ணிக்கைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. மொத்த வாக்குகளின் 2824 வாக்குகள் பெற்று திரெளபதி முர்மு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

இதன்மூலம் திரெளபதி முர்மு நாட்டின் 15ஆவது குடியரசுத் தலைவராகியுள்ளார். திரெளபதி முர்மு குடியரசுத் தலைவராகியுள்ளதன் மூலம் நாட்டின் முதல் பழங்குடி பெண் குடியரசுத் தலைவர் எனும் பெருமையை அவர் பெறுகிறார்.  திரௌபதி முர்மு குடியரசுத் தலைவராக வருகிற ஜூலை 25 ஆம் தேதி பதவியேற்க உள்ளார்.