டெல்லி: கேஸ் உள்பட உணவுப்பொருட்களின் விலைவாசி உயர்வு, பணவீக்கம் பிரச்சனைகளை வலியுறுத்தி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம் நடத்தினர்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 18ந்தேதி முதல் நடைபெற்று வருகிறது. இன்று 3வது நாள் அமர்வு நடைபெறுகிறது. முன்னதாக, நாடாளுமன்ற வளாகத்தில் அமைந்துள்ள காந்திசிலை முன்பு, , விலைவாசி உயர்வு, பணவீக்கம் உள்ளிட்ட பிரச்சனைகளை வலியுறுத்தி காங்கிரஸ் எம்.பி.க்கள் மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோர் தலைமையில் திமுக உள்பட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கலந்துகொண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.