புதுடெல்லி:
நீட் தேர்வில் மோசடி நடந்துள்ளதாகவும், ஒரு சீட் ரூ.20 லட்சதுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மருத்துவப் படிப்புகளில், ‘உறுதிப்படுத்தப்பட்ட’ இடங்களை வழங்கும் பல மாநில மோசடி, 8 பேரை, மத்திய புலனாய்வு துறையினர் கைது செய்ததன் மூலம், கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பீகார், உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் ஹரியானாவில் பரவியிருக்கும் இந்த மோசடி நடவடிக்கை பாலிவுட் பிளாக்பஸ்டர் “முன்னாபாய் எம்பிபிஎஸ்”-இல் காட்டிய வழியில் செயல்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

ஒவ்வொரு இருக்கைக்கும் ரூ.20 லட்சம் செலவாகும், அதில் 5 லட்சம் மாணவனாக ஆள்மாறாட்டம் செய்து நீட் வினாத்தாளை பார்த்து சரியாக பதில் எழுதும்  நபருக்கு வழங்கப்பட்டதாக ஏஜென்சி வட்டாரங்கள் தெரிவித்தன. மீதியை இடைத்தரகர்களும் மற்றவர்களும் பகிர்ந்து கொள்கின்றனர்.

மோசடியை தடுக்க, நீட் தேர்விற்கான பாதுகாப்பு சோதனைகளை அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளனர், அங்கு தேர்வு கூடத்தில் பணப்பைகள், கைப்பைகள், பெல்ட்கள், தொப்பிகள், நகைகள், காலணிகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் எழுதுபொருட்கள் எதையும் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை.

இருப்பினும் இந்த மோசடி நடந்துள்ளதாகவும், தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாகவும் சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.