டெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், எதிர்க்கட்சிகள் தொடர் அமளி காரணமாக, இரு அவைகளும் நாளை வரை ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று( ஜூலை 18) தொடங்கியது. தொடர்ந்து அடுத்த மாதம் 12ம் தேதி வரை 14 நாட்கள் கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத் தொடரில் 24 மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதேநேரம், அக்னிபாத், எரிபொருள் விலை உயர்வு உள்ளிட்ட பிரச்சனைகளை எழுப்ப எதிர்க்கட்சிகளும் திட்டமிட்டுள்ளன. பரபரப்பான அரசியல் சூழலுக்கிடையே தொடங்கிய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் , புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.
முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி தனது உயர்மட்ட அமைச்சர்களுடன் நாடாளுமன்ற வளாகத்தில் சந்திப்பு நடத்தினார். தொடர்ந்து, நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் தற்போது நடைபெற்று வருவதால் இந்த அமர்வு முக்கியமானது. இன்று (ஜனாதிபதி தேர்தலுக்கான) வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த காலகட்டத்தில், புதிய ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி தேசத்தை வழிநடத்தத் தொடங்குவார்கள் என்றவர், நாடாளுமன்ற மழைக்கால அமர்வை பயனுள்ளதாக மாற்ற எம்.பி.க்களுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன், இந்த தொடரில், வெளிப்படையான விவாதம் மற்றும் விவாதம் மற்றும் உரையாடல் மற்றும் விமர்சனங்களும் இருக்க வேண்டும்; மற்றும் நல்ல பகுப்பாய்வு, அதனால் கொள்கை மற்றும் முடிவுகள் நன்றாக இருக்கும். நல்ல விவாதம் முக்கியம் என்றும், இந்த அமர்வை பயனுள்ளதாகவும் பயனுள்ளதாகவும் மாற்ற அனைத்து எம்பிக்களுக்கும் நான் வேண்டுகோள் விடுக்கிறேன் என்றார்.
நாடாளுமன்றம் எப்போதும் பேச்சுவார்த்தைக்கான இடமாக இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம் என பேசியவர், இந்த காலம் மிகவும் முக்கியமானது. இது ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ் காலம். ஆகஸ்ட் 15 க்கு ஒரு சிறப்பு முக்கியத்துவம் உள்ளது மற்றும் வரும் 25 ஆண்டுகள், நாடு சுதந்திரம் அடைந்த 100 ஆண்டுகளைக் கொண்டாடும் போது, நமது பயணத்தையும், புதிய உயரங்களையும் தீர்மானிக்க ஒரு தீர்மானத்தை எடுக்க வேண்டிய நேரம் இதுவாகும் என்று பிரதமர் மோடி கூறினார்.
இதற்கிடையில், நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத் தொடர் தொடங்குவதற்கு ஒரு நாள் முன்னதாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அரசு சார்பில், 32 மசோதாக்கள் பல்வேறு துறைகளால் இரண்டு அவைகளில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன, அவற்றில் 14 தயாராக உள்ளன, அவை அனைத்தையும் விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியது. நாங்கள் விவாதமின்றி மசோதாக்களை நிறைவேற்ற மாட்டோம்,” அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு, நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, இந்த 32 மசோதாக்களில் சில நாடாளுமன்ற நிலைக்குழுக்களால் ஏற்கனவே விவாதிக்கப்பட்டுள்ளன என்று கூறினார்.
வெளிவிவகார மற்றும் நிதியமைச்சகங்கள் பாராளுமன்றத்தில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு இலங்கை நிலைமை குறித்து செவ்வாய்கிழமை விளக்கமளிக்கவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அலுவலக குறிப்பேடு ஒன்றை மேற்கோள் காட்டி, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரின் இரண்டாவது நாளான ஜூலை 19ஆம் தேதி மாலை இரு அமைச்சகங்களின் விளக்கக்கூட்டம் திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
முன்னதாக, மத்திய அரசின் அக்னிபாத் ஆட்சேர்ப்பு திட்டம் தொடர்பாக காங்கிரஸ் எம்பி தீபேந்தர் சிங் ஹூடா ராஜ்யசபாவில் அலுவல் அறிவிப்பை இடைநிறுத்தினார்.
ராஜ்யசபாவில் சிபிஐ (எம்) கட்சித் தலைவர் எளமரம் கரீம் எம்பி, விதி 267ன் கீழ் வணிகத்தை நிறுத்தி வைத்து விலைவாசி உயர்வு மற்றும் அத்தியாவசியப் பொருட்களுக்கு 5% ஜிஎஸ்டி வரி விதிப்பு விவகாரம் குறித்து விவாதிக்க நோட்டீஸ் கொடுத்துள்ளார்.
கெஜ்ரிவாலை சிங்கப்பூர் செல்ல மத்திய அரசு அனுமதிக்காதது தொடர்பாக ஆம் ஆத்மியின் ராஜ்யசபா எம்பி சஞ்சய் சிங், “விதி 267ன் கீழ் அலுவல் நோட்டீஸை இடைநிறுத்துவதாகவும், இந்த விவகாரம் குறித்து விவாதம் நடத்தக் கோருவதாகவும் செய்தி நிறுவனம் ஏஎன்ஐ தெரிவித்துள்ளது.
எரிபொருள் விலை உயர்வு குறித்து விவாதிக்க லோக்சபாவில் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் கொடுத்துள்ளர். நாட்டில் வீட்டு சிலிண்டர்கள் மற்றும் பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வு” விவகாரம் குறித்து விவாதிக்க மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் அளித்தார்.
இந்த பரபரப்பான சூழலில் இன்று மழைக்கால கூட்டத்தொர் கூடியது. அலுவல் தொடங்கியதும் ஜப்பான் முன்னாள் பிரதமர் அபே மறைவு மற்றும் மறைந்த முன்னாள் எம்.பி.க்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்ட அவை மீண்டும் கூடியது.
அவை வடியதும், விலைவாசி உயர்வு, ஜிஎஸ்டி போன்ற பிரச்னைகள் தொடர்பாக காங்கிரஸ் எம்.பி.க்கள் கோஷமிட்டு, அவை நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, மக்களவை மதியம் 2மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் மீண்டும் அவை கூடியதும் எம்.பி.க்கள் தொடர் கோஷம் எழுப்பியதால், மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளான திங்கள்கிழமை ராஜ்யசபா நடவடிக்கைகள் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
அதுபோல, ஜி.எஸ்.டி. வரி விதிப்பு, பணவீக்கம் உள்ளிட்டவைக்கு எதிராக நாடாளுமன்ற ராஜ்யசபாவில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் நாள் முழுவதும் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன. மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடுவின் இருக்கைக்கு முன்பு நின்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து முழக்கமிட்டதால் நாளை காலை 12 மணிவரை அவை ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ற்பகலில் அவை கூடியவுடன் அதே பிரச்சனைகளை காரணம்காட்டி எதிர்க்கட்சிகள் பதாகைகள் ஏந்தி முழக்கமிட்டனர். இதனால், நாள் முழுவதும் ஒத்திவைப்பதாக அறிவிக்கப்பட்டது.