புதுடெல்லி:
குமரி முதல் காஷ்மீர் வரை “பாரதத்தை இணைப்போம்” என்ற பெயரில் பாத யாத்திரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இந்த யாத்திரை அக்.2ல் தொடங்கும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அறிவித்துள்ளார்.

“பாரதத்தை இணைப்போம்” என்ற பெயரில் குமரி முதல் காஷ்மீர் வரை 3,500 கிலோ மீட்டர் பாதயாத்திரை நடத்த காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் தேச ஒற்றுமைக்காக நடத்தப்பட உள்ள இந்த பாத யாத்திரை 148 நாட்களில் 3,500 கிலோ மீட்டர் நடத்தப்பட உள்ளது.

இந்நிலையில், வரும் அக்டோபர் 2-ஆம் தேதி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி துவக்கி வைக்க உள்ளார்.

விரைவில் நடக்க உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தலில் மீண்டும் ராகுல் காந்தியே கட்சித் தலைவராகப் பொறுப்பேற்பார் என்றும், அவர் தலைமையில் இந்த யாத்திரை நடத்தப்படும் என்று கட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.