தஞ்சாவூர்:
தஞ்சாவூரை சேர்ந்த விவசாயி திருவள்ளுவர் உருவப்படத்தில் நெல் விதைத்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

தஞ்சாவூர் மலையப்பநல்லூரைச் சேர்ந்த விவசாயி இளங்கோவன். இவர் தமிழ்க் கவிஞர் திருவள்ளுவர் உருவப்படத்தில் நெல் விதித்துள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், நான் பல வருடங்களாக இயற்கை விவசாயம் செய்து வருகிறேன் என்றும், இயற்கை விவசாயம் பற்றி திருவள்ளுவர் எழுதியிருப்பதால் 2 வகையான நெல் ரகங்களை கொண்டு இதை செய்தேன் என்றும் கூறியுள்ளார்.
Patrikai.com official YouTube Channel