திருவாரூர்:
திருவாரூர் அருகே கடந்த சில நாட்களுக்கு முன் அரசுப் பேருந்தின் படிக்கட்டு உடைந்த சம்பவத்தில், 2 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

திருவாரூரில் இருந்து கங்களாஞ்சேரி வழியாக நாகூர் வரையிலான நகர பஸ் ஒன்று நேற்று முன்தினம் திருவாரூரில் இருந்து நாகூர் சென்று விட்டு மீண்டும் அங்கிருந்து புறப்பட்டு திருவாரூர் வந்து கொண்டிருந்தது.
அப்போது கங்களாஞ்சேரி ரெயில்வே கேட் அருகே வேகத்தடையில் பஸ் சக்கரம் ஏறி இறங்கிய போது முன்பக்க படிக்கட்டு உடைந்தது. படிக்கட்டில் பயணம் செய்த மாணவர்கள் அதிர்ஷ்டவசமாக காயம் இன்றி உயிர் தப்பினர்.
இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக திருவாரூர் அரசு போக்குவரத்துக் கழக தொழில்நுட்ப பணியாளர் வீரபாண்டியன், பொறியாளர் அசோகன் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
[youtube-feed feed=1]