சென்னை: அண்ணாமலை பல்கலைக்கழகம் மற்றும், மீன்வளப் பல்கலைக்கழகங்களில் நடப்பாண்டு இளநிலை பட்டயப்படிப்புக்கு ஆன்லைன்மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழகம் முழுவதிலும் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் வரும் ஜூன் 22ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்ப பதிவு நடைபெற்று வருகிறது. அதுபோல, அரசு பொறியியல்கல்லூரிகளில் நடப்பாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு கடந்த மாதம் 20ந்தேதி முதல் விநடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், கடலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அண்ணாமலை பல்கலைக்கழகம் மற்றும், ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பலைக்கழகங்களில் நடப்பாண்டு மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைனி விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நடப்பு கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான இணையவழி விண்ணப்ப விநியோகம் இன்று தொடங்கியது. பூர்த்தி செய்யப்பட்ட இணையவழி விண்ணப்பங்களை ஆகஸ்ட் 8ம் தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதுபோல, மீன்வள படிப்புகளில் சேர விரும்பும் மாணாக்கர்கள், நாளை (ஜூலை 8ந்தேதி) முதல் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. B.F.Sc., B.Tech., BBA, B.Voc. உள்ளிட்ட 9 வகையான மீன்வள படிப்புகளில் உள்ள 345 இடங்களில் சேர நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.