கொல்கத்தா: நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த, நூபுர்சர்மா மீது கொல்கத்தா காவல்துறையினர் லுக்அவுட் நோட்டீஸ் வெளியிட்டு உள்ளது.

தொலைக்காட்சி ஊடகம் ஒன்றில்  ஞானவாபி மசூதி தொடா்பான விவாத நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பாஜக முன்னாள் செய்தித்தொடா்பாளா் நூபுா் சா்மா பேசிய கருத்து சர்ச்சையானது. இதுகுறித்து முஸ்லிம்கள் போராட்டம் நடத்தியதைத் தொடர்ந்து, அவர்மீது எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் நூபுர் சர்மா மீது வழக்குகள் தொடரப்பட்டுள்ளது.  மேற்கு வங்கத்தில் பல இடங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்குகளை டெல்லிக்கு மாற்றக்கோரி உச்சநீதிமன்றத்தில் நூபுர் சர்மா வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ‘அவரது மனுவை ஏற்க மறுத்ததுடன், சா்ச்சைக்குரிய கருத்துகளுக்கு ஒட்டுமொத்த நாட்டிடமும் நூபுா் சா்மா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று  தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் நூபுர் சர்மா மீது கொல்கத்தா காவல்துறையினர் லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளனர். ஏற்கெனவே 2 காவல் நிலையங்களில் இருந்து நூபுர் சர்மாவுக்கு சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் அவர் ஆஜராகவில்லை. இந்த நிலையில், தற்போது, காவல்துறையினர் லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளனர்.