திருமலை:
திருப்பதி ஏழுமலையான் பிரம்மோற்சவம் வரும் செப்டம்பர் 27-ஆம் தேதி முதல் நடக்க் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருமலையில் ஆண்டுதோறும் ஏழுமலையானுக்கு வருடாந்திர பிரம்மோற்சவம் மிகவும் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. இந்தாண்டு, செப்டம்பர் 27-ஆம் தேதி முதல் அக்டோபர் 5ஆம் தேதி வரை தொடர்ந்து, 9 நாட்களுக்கு பிரம்மோற்சவம் நடக்க உள்ளது.
இதுகுறித்து திருப்பதி தேவஸ்தான அதிகாரி தெரிவிக்கையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் தடுப்பு விதிமுறைகள் அமலில் இருந்ததால், பிரம்மோற்சவத்தின் போது வாகன சேவைகள் கோவிலுக்குள் பக்தர்களின்றி நடத்தப்பட்டது. ஆனால், இம்முறை மாட வீதிகளில் வாகன சேவைகளின் அணிவகுப்பு நடக்கவுள்ளது என்று கூறினார்.
Patrikai.com official YouTube Channel