சென்னை:
தமிழக அரசுப் பேருந்தின் மொத்தப் பயணிகளில் 62.34% பேர் பெண்கள் என்று தமிழ்நாடு போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு போக்குவரத்துத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 2022-ஆம் ஆண்டு ஜூலை 27-ஆம் தேதி நிலவரப்படி, கட்டணமில்லா பயணம் செய்தவர்களில், 131 கோடியே 31 லட்சம் பேர் பெண்கள் என்றும், 7.48 லட்சம் பேர் திருநங்கைகள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாள் ஒன்றுக்கு சராசரியாக 37.41 லட்சம் பெண்கள் பயணம் செய்வதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel