சென்னை: அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துனர்களுக்கு தினசரி பேட்டா உயர்த்தி தமிழகஅரசு அறிவித்து உள்ளது.
இதுகுறித்த தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கான 14-வது ஊதிய ஒப்பந்த, நான்காவது கட்ட பேச்சுவார்த்தை கடந்த மாதம் 12ந் தேதி நடைபெற்ற போது, மகளிர் கட்டணமில்லாமல் பயணம் செய்யும் பேருந்துகளின் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு பேட்டாவை நிர்ணயம் செய்ய வேண்டுமென்று போக்குவரத்துக் கழக தொழிற்சங்கங் களின் பிரதிநிதிகள் கேட்டுக்கொண்டனர்.
அதன் அடிப்படையிலும், முதலமைச்சரின் அறிவுரையின் பேரிலும், சென்னை உள்ளிட்ட தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக சாதாரண பயண கட்டண பேருந்துகளில் மகளிர் இலவச பேருந்து பயணம் செய்ய அனுமதித்ததை தொடர்ந்து ஓட்டுநர், நடத்துநர்கள் பெற்று வந்த வசூல்படி குறை வினை ஈடுகட்டும் வகையில் அதனை உயர்த்தி முறைப்படுத்தி வழங்கும் வகையில் சாதாரண கட்டண பேருந்துகளின் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் வசூல்படி இரட்டிப்பாக வழங்கப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.