சென்னை: கல்லூரிகளில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம் இன்று தொடங்கப்பட்டு உள்ளது. அதற்காக சிறப்பு முகாம்கள் இன்றுமுதல் 30ந்தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்து, உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கு மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டம் மூலம் மாதம்தோறும் ரூ.1,000 வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இந்த திட்டம் ஜூலை 15-ம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இதன் தொடர்ச்சியாக அரசு பள்ளிகளில் படித்து கலை அறிவியல் கல்லூரிகளில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டத்திற்கு தகுதியான மாணவிகளை கண்டறிய அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அதற்கான விண்ணப்ப பதிவு இன்று தொடங்குகிகறது. இதற்காக இன்று முதல் 30ந்தேதி வரை சிறப்பு முகாம்கள் அமைத்து தகுதியான மாணவிகள் பெயர்களை பதிவு செய்யலாம் – உயர்கல்வித்துறை அறிவித்து உள்ளது. மேலும், மாணவிகள், ஆதார், வங்கி கணக்கு விவரம், கல்வி சான்றிதழ்களை விண்ணப்பத்துடன் penkalvi.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலமாகவும் பதிவேற்றம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.