சென்னை: சென்னை டைடல் பூங்காவில் திறன்மிகு மையம் அமைக்கவும், ஸ்ரீபெரும்புதூரில் 2 சிப்காட் பூங்காவை திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின், திருப்பூர் மினி டைடல் பூங்காவுக்கு அடிக்கல் நாட்டினார்.
சென்னை தரமணி, டைடல் பார்க் கூட்ட அரங்கில் மேம்பட்ட உற்பத்தி மாநாட்டை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின். ரூ.212 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள திறன்மிகு மையத்தை முதல்வர் திறந்து வைத்தார். அத்துடன் திருப்பூர், விழுப்புரம் மாவட்டங்களில் ரூ. 77 கோடியில் அமையவுள்ள டைடல் பூங்காக்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.நிகழ்ச்சியில் பேசிய முதல்வர், அறிவுசார் நகரம் திட்டத்தை நடைமுறைப்படுத்த தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், தற்போதுள்ள தொழிற்சாலைகள் ஸ்மார் தொழிற்சாலைகளாக மாற்ற வேண்டும் என்று கூறினார்.
சென்னை, தரமணி, டைடல் பூங்காவில் மேம்பட்ட உற்பத்திக்கான மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டு, சென்னை டைடல் பார்க்கில் ரூ. 212 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு மேம்பட்ட உற்பத்தி முறைக்கான திறன்மிகு மையம், ஸ்ரீபெரும்புதூர் மற்றும் ஓசூரில் உள்ள சிப்காட் தொழிற் பூங்காக்களில் ரூ. 33.46 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள 2 சிப்காட் தொழில் புத்தாக்க மையங்கள் ஆகியவற்றை திறந்து வைத்து, திருப்பூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ரூ. 76.90 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள மினி டைடல் பூங்காக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து, ஓசூரில் உள்ள சிப்காட் தொழிற் பூங்காக்களில் அமைக்கப்பட்டுள்ள இரண்டு சிப்காட் தொழில் புத்தாக்க மையங்களை திறந்து வைத்தார்.
தமிழ்நாடு மேம்பாட்டு உற்பத்தி மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றியபோது, தமிழ்நாட்டில் தொழில்துறையினருக்கு சாதமான சூழல் தமிழகத்தில் உள்ளது. உற்பத்தியில் அகில இந்திய அளவில் தமிழ்நாடு சிறந்த மாநிலமாக உள்ளது. டைடல் பார்க்குகள் மூலம் இளைஞர்களுக்கு அவர்களது சொந்த ஊரிலேயே வேலை கிடைக்கும். 2030 ஆம் ஆண்டில் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார வளர்ச்சி என்ற இலக்குடன் தமிழ்நாடு அரசு செயல்படுகிறது. தற்போதுள்ள தொழிற்சாலைகள் ஸ்மார்ட் தொழிற்சாலைகளாக மாற்ற வேண்டும் என்று கூறினார்.