சென்னை:
ஜனாதிபதி தேர்தலில் பாஜக கூட்டணி வேட்பாளர் நாளை வேட்புமனு தாக்கல் செய்யும் நிகழ்வில் பங்கேற்கவிருப்பதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் டெல்லிக்கு புறப்பட்டு சென்றார், அவருடன், அவரது மகன் ரவீந்திரநாத் மற்றும் வைத்தியலிங்கம், மனோஜ்பாண்டியன், ஜேசிடி பிரபாகரன், வழக்கறிஞர் ஆகியோரும் சென்றனர். ஒற்றை தலைமை சர்ச்சை குறித்து உச்சநீதிமன்றம், தேர்தல் ஆணையம் ஆகியவற்றில் முறையீடு செய்யவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எடப்பாடி பழனிசாமி சார்பாக தம்பிதுரை டெல்லி செல்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Patrikai.com official YouTube Channel