சென்னை: அ.தி.மு.க.,வில் ஒற்றைத் தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், பெரும்பாமையோனார் ஆதரவு இருந்தால், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அனுமதியின்றி, சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. மூத்த வழக்கறிஞர்களும் நீதிமன்ற விசாரணையின்போத இதை உறுதி செய்துள்ளனர்.
அதிமுக பொதுக்குழு நாளை கூட உள்ள நிலையில், கட்சியின் . இதில் பெரும்பாலான கட்சி நிர்வாகிகள் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவளித்து வருகின்றனர். கலந்துகொள்வதாக ஓபிஎஸ் உறுதி அளித்துள்ளார்.
இந்தநிலையில், அதிமுக பொதுக்குழு நடைபெறவுள்ள இடத்தில் போலீசார் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அப்போது அதிமுக பொதுக்குழு பாதுகாப்பு குறித்து முன்னாள் அமைச்சர் பெஞ்சமினிடம், பொதுக்குழுவில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்தும் காவல்துறையினர் கேட்டறிந்தனர். அதிமுக பொதுக்குழுவில் பங்கேற்பவர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுட உள்ளது. பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்கும் உறுப்பினர்கள், பொதுக்குழுவிற்கான அழைப்பிதழ் மற்றும் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை அவசியம் என்றும் இல்லையென்றால், ஆதார் அல்லது வாக்காளர் அட்டையும் கட்டாயம் காண்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இந்த பரபரப்பான சூழலில், அதிமுக கட்சி விதிகளில் திருத்தங்கள் மேற்கொள்ள தடை விதிக்க கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று மாலை நடைபெற்ற விசாரணையின்போது, கட்சியின், அடிப்படை உறுப்பினர்களை நீக்கவும், புதிய நியமனங்களுக்கு தடை விதிக்கவும் மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. இதை ஏற்பதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஓபிஎஸ் ஒப்புதல் வழங்கினார். மேலும், அதிமுக பொதுக்குழுலிவல், நிறைவேற்றப்பட உள்ள தீர்மானங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு இருப்பதாகவும், மேலும் கட்சி விதிகளுக்கு முரணாக செயல்படமாட்டோம் என ஓபிஎஸ் தரப்பு நீதிமன்றத்தில் உறுதி அளித்துள்ளது.
முன்னதாக, அதிமுக பொதுக்குழுவுக்கு வாருங்கள் என ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார். மேலும் அவர், எந்த பிரச்சினையாக இருந்தாலும் பொதுக்குழுவில் பேசி தீர்த்துக் கொள்ளலாம். ஒருங்கிணைப்பாளர்கள் என்ற முறை யில் இருவரும் இணைந்து பொதுக்குழுவில் பங்கேற்போம் என்று தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், ஓபிஎஸ் தரப்பு நீதிமன்றத்தில், 23 தீர்மானங்கள் தவிர வேறு எதற்கும் அனுமதி கொடுக்கமாட்டோம் என்று கூறியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாதாடிய எடப்பாடி தரப்பு வழக்கறிஞர், பொதுக்குழுவுக்கு விதிகளை திருத்தம் செய்ய அதிகாரம் உள்ளது, அதை ஓபிஎஸ் தடுக்க முடியாதுஎன்று தெரிவித்துள்ளனர்.
பொதுக்குழுவிற்கான நோட்டீஸ் கடந்த ஜூன் 2ஆம் தேதியே கொடுக்கப்பட்டுள்ளது. இதுவரை நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில், பொதுக்குழு, செயற்குழு அஜெண்டாக்கள் வெளியிடப்பட்டது இல்லை. இந்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல, இதனை நிராகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தியதுடன், அதிமுக பொதுக்குழுதான் கட்சியின் உச்சபட்ச அமைப்பு, ஒருங்கிணைப்பாளரோ, இணை ஒருங்கிணைப்பாளரோ கிடையாது என வாதாடப்பட்டது.
மேலும், கட்சியின் விதிகளை திருத்த, யாரிடமும் அனுமதி பெற வேண்டியது இல்லை தெரிவித்துள்ளதுடன், தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்தால் போதும் என்றும், அதிமுக பொதுக்குழு கூட்டுவதில் விதிமீறல் இல்லை, சட்டவிதிகளுக்கு உட்பட்டுதான் கூட்டப்படுகிறது என இபிஎஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கூறிய மூத்த வழக்கறிஞர் ஜி .ராஜகோபால். அதிமுகவின் பொதுக்குழுவில் சட்டத்திருத்தங்களைச் செய்வதற்கு முன் எந்தவொரு நிகழ்ச்சி நிரலையும் வெளியிடாமல் இருப்பது கட்சியின் கடந்தகால வழக்கம். ஒருங்கிணைப்பாளர் மற்றும் கூட்டு ஒருங்கிணைப்பாளர் பதவிகள் கூட எந்த நிகழ்ச்சி நிரலும் இல்லாமல்தான் கடந்த 2017 இல் உருவாக்கப்பட்டது என்பதை சுட்டிக்காட்டியுள்ளார்.
அதுபோல மூத்த வக்கீல் விஜய் நாராயண் (இபிஎஸ் சார்பில்), பொதுக்குழுவில் வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்படுமா என்பதை, இப்போது சொல்ல முடியாது. பொதுக்குழுக் கூட்டத்தில், கட்சி பைலா (சட்ட விதிகள்) மாற்றம் செய்ய வேண்டும் என உறுப்பினர்கள் கோரிக்கை வைக்கலாம். அந்த கோரிக்கைக்கு அதிக ஆதரவு இருந்தால், திருத்தம் நிறைவேற்றப்படும் என்பது கடந்த கால நடைமுறை. அது நாளை நடக்குமா என்பது முழுக்க முழுக்க ஊகத்தின் அடிப்படையில் உள்ளது. அது நடக்கலாம் அல்லது நடக்காமல் போகலாம் என்று தெரிவித்துள்ளார்.