சென்னை:
சிதம்பரம் கோவில் குறித்து ஆலோசனை வழங்கலாம் என்று இந்து அறநிலைய துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து இந்து அறநிலைய துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், கடலூர், சிதம்பரம் நடராஜர் கோவில் குறித்து கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை தெரிவிக்கலாம் என்றும், நாளை முதல் ஜூன் 21ம் தேதி மாலை 3 மணி வரை ஆலோசனைகள் வழங்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆலோசனைகளை vocud.hrce@tn.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியிலோ அல்லது அஞ்சல் வழியாகவோ தெரிவிக்கலாம் என்றும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel