புதுடெல்லி:
‘நோ பார்க்கிங்’ பகுதியில் வாகனம் நிறுத்துபவர்கள் குறித்து தகவல் அளிப்பவருக்கு சன்மானம் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி, மக்கள் வாகனங்களை நிறுத்துவதில் காட்டும் அலட்சியத்தால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அனுமதியில்லாத இடங்களில் வாகனங்களை நிறுத்துவதை தடுக்க, இத்தகைய இடங்களில் வாகனங்களை நிறுத்துவோருக்கு 1000 ரூபாய் அபராதம் விதிக்க வேண்டும்.

அனுமதி இல்லாத இடத்தில் நிறுத்தப்பட்டுள்ள வாகனத்தை புகைப்படம் எடுத்து போலீசுக்கு அனுப்புவோருக்கு, 500 ரூபாய் பரிசளிக்க வேண்டும். அதை செயல்படுத்தும் வகையில் சட்ட திருத்தம் கொண்டு வர ஆலோசித்து வருகிறேன்” என்று அவர் கூறினார்.