டெல்லி: வடமாநிலங்களில் அக்னிபாத் திட்டத்துக்கு எதிரான போராட்டத்தினால் 200க்கும் மேற்பட்ட ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டு உள்ளதாக வும், 35 ரயில்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளதாகவும் இந்தியன் ரயில்வே தெரிவித்து உள்ளது.

ராணுவ ஆள்சேர்ப்பு தொடர்பாக மத்தியஅரசு அறிவித்துள்ள அக்னிபாத் திட்டத்துக்கு எதிராக வடமாநிங்களில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இந்த போராட்டத்தின்போது வன்முறையாளர்கள் பல ரயில்களுக்கு தீ வைத்து வருகின்றனர். இதனால் பல இடங்களில் ரயில் சேவை பாதிக்கப் பட்டு உள்ளது.

இதுதொடர்பாக வடகிழக்கு மாநில ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அக்னிபாத்துக்கு எதிரான போராட்டத்தில்,  இதுவரை 200க்கும் மேற்பட்ட ரயில்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 35 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், 13 ரயில்கள் குறுகிய காலத்திற்கு நிறுத்தப்பட்ட தாகவும் தெரிவித்துள்ளது.