கொச்சி: மலையாளிகளிடையே வெளிநாட்டு மோகம் தீவிரமாக இருக்கும் நிலையில், 3பெண்கள் குவைத்தில் தலா ரூ.10 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்ட அவலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அவர்கள் தற்போது மீட்கப்பட்டு தாயகம் திரும்பி உள்ளனர்.
இந்தியர்களிடையே வெளிநாட்டு மோகம் அதிகரித்து வரும் நிலையில், கேரள மக்களிடையே வெளிநாட்டு மோகம் தீவிரமாக உள்ளது. ஒரு குடும்பத்தில் ஒருவராவது வெளிநாட்டில் பணி செய்து வரும் நிலை இருக்கிறது. இதனால்தான் நோய்தொற்று, கடத்தல் உள்பட பல்வேறு நிகழ்வு களில் கேரள மாநிலம் முன்னணியில் இருந்து வருகிறது.
இந்த நிலையில், கேரளாவில் இருந்து வீட்டு வேலைக்காக குவைத்து அழைத்துச்செல்லப்பட்ட பெண்களில் 3 பேர், தலா ரூ.10 லட்சத்துக்கு அங்கு அடிமையாக விற்பனை செய்யட்டுள்ளனர். இந்த விவகாரம் சமீபத்தில்தான் தெரிய வந்துள்ளது. அந்த பெண்கள் அங்கு சித்திரவதை அனுபவித்த வந்த நிலையில், ஒரு பெண் மட்டும் தனது கணவருக்கு தகவல் தெரிவித்தள்ளார். இதையடுத்து, அவர், குவைத்தில் இருக்கும் மலையாளிகளின் நல அமைப்புக்கு தனது மனைவி படும் இன்னல்கள் குறித்து விடியோ மற்றும் ஆடியோவை வாட்ஸ்ஆப் மூலம் பகிர்ந்துள்ளார். இதன்பிறகே இந்த அவலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இதையடுத்து, குவைத் நாட்டிலிருக்கும் மலையாளிகளின் நல அமைப்பு இந்த விவகாரத்தில் தலையிட்டு, இந்திய தூதரக அதிகாரிகள் மூலம், உரிய நேரத்தில் பெண்களை மீட்டுள்ளது.
இதற்கு பின்னணியில் கேரளத்தை பூர்வீகமாகக் கொண்டு துபாயில் வாழ்ந்து வரும் எம்.கே.கஸ்ஸாலி என்பவர் இருந்து வந்துள்ளதும், அவர், மூன்று பெண்களையும் விடுவிக்க வேண்டும் என்றால் பல லட்சம் பணம் கொடுக்குமாறு, பெண்களின் குடும்பத்தினரையும் மிரட்டியுள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து விமான நிலையத்தில் கண்ணீர்மல்க கூறிய பெண்கள், வேலைக்கு ஆட்கள் வேண்டும் என்ற விளம்பரத்தைப் பார்த்து ஏமாந்து அங்கு சென்றதாகவும், மாதம் 60 ஆயிரம் ஊதியம் வழங்கப்படும் என்று சொன்னதால் சென்றோம் என்றவர், ஆனால், ஏஜெண்டுகள் எங்களை, குவைத்திலிருக்கும் மிகப்பணக்கார குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சத்துக்கு விற்றுவிட்ட்ர்கள். இது எங்களுக்கு ஆரம்பத்தில் தெரிய வல்லை. பல நாட்களுக்கு பிறகுதான், தாங்கள் இந்த குடும்பங்களுக்கு விற்கப்பட்டிருக்கிறோம் என்பதே தெரிய வந்தது, இதைடுத்து, நண்பர்கள் உதவியுடன், தப்பிக்க முடிந்தது என்று தெரிவித்தனர்.
இந்த சம்பவம் வெளிநாடு மோகத்தில் இருப்பவர்களுக்கு ஒரு பாடமாக அமையும் என எதிர்பார்க்கலாம்…