டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 6,594 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 4,035 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர்.
இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வந்தது. கடந்த சில நாட்களாக தினசரி தொற்று பாதிப்பு அதிகரித்து வந்தது. தினசரி பாதிப்பு 8ஆயிரம் கடந்த நிலையில், இன்று ஆறாயிரத்து ஐநூறாக குறைந்து வருகிறது. இருந்தாலும் மக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பு நெறிமுறைகள், முக்கவசம் அணிய வேண்டும் என மத்திய, மாநில அரசுகள் வலியுறுத்தி வருகின்றன.
இந்த நிலையில், மத்திய சுகாதாரத்துறை இன்று காலை 8மணி வரையிலா கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறித்த அறிக்கையை வெளியிட்டு உள்ளது. அதன்படி, நேற்று புதிதாக மேலும், 6594 பேர் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,32,36,695 ஆக உயர்ந்தது.
கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் நேற்று6 பேர் இறந்துள்ளனர். இதன்மூலம், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,24,777 ஆக உயர்ந்தது. ஆனால், உயிரிழந்தோர் விகிதம் 1.21% ஆக குறைந்துள்ளது.
கடந்த 24மணி நேரத்தில், தொற்றில் இருந்து ஒரே நாளில் 4,035 பேர் குணமடைந்துள்ளனர். இதன்மூலம் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4,26,61,370ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் விகிதம் 98.67% ஆக உயர்ந்துள்ளது
நாடு முழுவதும் தற்போதைய நிலையில் 50,548 கொரோனா நோயாளிகளுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. சிகிச்சை பெறுவோர் விகிதம் 0.11% ஆக குறைந்துள்ளது.
இந்தியாவில் இதுவரை 195.35 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.