புதுடெல்லி:
நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மீண்டும் இன்று ஆஜராக அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது.
நேஷனல் ஹெரால்டு வழக்கில் முறைகேடு நடைபெற்றதாக கூறி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. சோனியாவுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதால், அவருக்கு அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது. நாடு முழுவதும் அமலாக்கதுறை அலுவலகம் முன்பு சத்தியாகிரக போராட்டம் நடத்தப்படும் என காங்கிரஸ் கட்சி அறிவித்தது.
ஆனால், தடையை மீறி, அமலாக்கத்துறையின் விசாரணைக்கு ராகுல்காந்தி, காங்கிரஸ் கட்சியினருடன் பேரணியாக சென்று ஆஜர் ஆனார்.
இதைத்தொடர்ந்து ராகுலிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.இந்த விசாரணை இரவு 9.30 மணியளவில் நிறைவு பெற்றது.
இதனிடையே ராகுல் காந்தி மீண்டும் இன்று ஆஜராக அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது.