டெல்லி: ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான விளம்பரங்களை ஒளிபரப்பவோ, பிரசுரம் செய்யவோ என தொலைக்காட்சி மற்றும் சமூக ஊடகங்களுக்கு மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அறிவுறுத்தி உள்ளது.

இதுதொடர்பாக மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை ‘ஆன்லைன் பந்தய தளங்களின் விளம்பரம் குறித்த ஆலோசனை’ வெளியிடுகிறது. ஆன்லைன் பந்தய தளங்களின் விளம்பரங்களை வெளியிடுவதைத் தவிர்க்குமாறு அச்சு மற்றும் மின்னணு ஊடகங்கள் அறிவுறுத்தப்படுகின்றன என தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

மேலும்,  ஆன்லைன் சூதாட்டம்  மூக சிக்கல்களையும், நிதி பிரச்சனை களையும் ஏற்படுத்துகிறது. இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் மத்தியில் ஆன்லைன் சூதாட்டங்கள் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதனால் ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான விளம்பரங்களை வலைத்தளங் கள், இணைய ஊடகங்களிலும் வெளியிடக்கூடாது என தெரிவிக்கப் பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்கள், இணைய தலைகள் மக்கள் நலன் கருதி சூதாட்டம் தொடர்பான விளம்பரங்களை வெளியிட கூடாது என மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. எனவே, அனைத்து அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களுக்கு ஆன்லைன் சூதாட்ட விளம்பரங் களை தவிர்க்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது. நாட்டில் ஆன்லைன் சூதாட்டங்கள் மூலம் உயிர்பலி மற்றும் பணம் இழப்பு உள்ளிட்டவைகள் நிகழ்ந்து வரும் நிலையில், மத்திய அரசு அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.