சென்னை: தமிழகத்திலிருந்து 1,600 பேர் ஹஜ் புனித பயணம் மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. முதல் ஹஜ் பயண குழு வரும் 12ஆம் தேதி கொச்சியில் இருந்து புறப்படுகிறது.
தமிழகத்தைச் சேர்ந்த ஹஜ் யாத்ரிகர்கள் புனித பயணம் மேற்கொள்ள சென்னையில் செல்ல அனுமதிக்க மத்தியஅரசிடம் கோரிக்கை விடுக்கப் பட்டு வந்தது. அதன்படி, அடுத்த ஆண்டு முதல் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் சென்னையில் ஹஜ் பயணம் மேற்கொள்ள மத்தியஅரசு அனுமதி வழங்கி உள்ளது. ஆனால், இந்த ஆண்டு கொச்சியில் இருந்துதான் பயணம் மேற்கொள்ள வேண்டி நிலை உள்ளது.
இந்த நிலையில், தமிழகத்திலிருந்து இந்தாண்டு 1,600 பேர் ஹஜ் பயணம் மேற்கொள்ள தேர்வாகி உள்ள உள்ள நிலையில், வரும் 12ம் தேதி முதல் குழு கொச்சியில் இருந்து புறப்பட உள்ளனர். அவர்களை வழியனுப்பவும், அவர்களுக்கு தேவையான வசதிகள் முறையாக செய்யப்பட்டுள்ளதா என்பதை அமைச்சர் செஞ்சி மஸ்தான் நேரில் கண்காணிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.