கோவை:
கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிகளுக்கு பயணம் தொடர்பாக உதவுவதற்காக 2 செயற்கை நுண்ணறிவு ரோபோக்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

ஒரு ரோபோ விமான புறப்பாடு முனையத்திலும், மற்றொரு ரோபா விமான வருகை முனையத்திலும் நிறுத்தப்படும் என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த ரோபா யாரின் உதவியும் இன்றி தானாக நகரும் தன்மை கொண்டதாகும்.

பயணிகள் விமானத்திற்கு செல்ல வேண்டிய வழி, பாஸ்போர்ட் சரிபார்ப்பு இடம் உள்ளிட்ட இடங்களுக்கான வழிகளை பயணிகளுக்கு இந்த ரோபோக்கள் தெரிவிக்கும்.
Patrikai.com official YouTube Channel