சென்னை: தமிழகத்தின் 17 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன்  தெரிவித்து உள்ளார்.

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு கடந்த இரு மாதமாக வெகுவாக குறைந்திருந்தது.  சென்னை உள்பட ஒருசில மாவட்டங்களி மட்டுமே குறைந்த அளவிலான பாதிப்பு காணப்பட்டது. பெரும்பாலான மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அறவே ஒழிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், தற்போது மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது.

நேற்றைய நிலவரப்படி, சென்னையில் 82 பேருக்கும், செங்கல்பட்டில் 29 பேருக்கும்.  திருவள்ளூரில் 4 மற்றும் காஞ்சிபுரத்தில் 5 பேருக்கு, கோவையில் 7 பேருக்கும் மதுரை, சேலம், வேலூர் ஆகிய மாவட்டங்களில் தலா 2 பேருக்கும், ராணிப்பேட்டை, சிவகங்கை, திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருநெல்வேலி, திருச்சி ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.

இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, கோவை மற்றும் மொத்தமுள்ள 38 மாவட்டங்களில் பெரிய நகரங்களை தற்போது பல்வேறு இடங்களில் தினசரி ஒன்று இரண்டு பாதிப்புகள் என பதினேழு மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு பதிவாகி உள்ளதாகவும்,    தற்போது உலகளவில் மார்ச், ஏப்ரல் மாதங்களில் ஒமிக்ரான் உள்வகை தான் லேசாக உள்ளது. இதில் BA 1 2 3 அதிகமாக இருந்து வந்தது. தமிழ்நாட்டில் பிஏ2 தான் இருந்து வந்தது.

பொதுமக்கள் இந்த நேரத்தில் கொரோனா முடிந்து விட்டது, இனி நமக்கு வராது என்ற எண்ணத்தை மாற்றி உரிய கட்டுபாடுகளோடு இல்லா விட்டால் அது மீண்டும் தலைதூக்கும்.  அதனை தலைதூக்காமல் இருப்பதற்கு பொதுமக்களின் பங்களிப்பு முக்கியமானது’ என்று கூறினார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த  மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், ‘தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கூடுதலாக துவங்கி இருக்கிறது. கடந்த இரண்டு நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. தமிழகத்தைப் பொருத்தவரை 17 மாவட்டங்களில் கொரோனா தொற்று பரவத் துவங்கி உள்ளது.

இதற்கு முன்னால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் மட்டுமே பெரிதளவிலான பாதிப்பு இருந்த நிலைமாறி 17 மாவட்டங்களில் ஒன்றிரண்டு என 150 வரை வந்துள்ளது. இதைத் தடுப்பதற்கு துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மாவட்ட ஆட்சியர்களுக்கும், சுகாதார செயலாளர்களுக்கு கடிதம் அனுப்பி உள்ளதார். அதில், கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகளை வழங்கி உள்ளார்’ என்றார்.