டெல்லி: உயர்நிலை மருத்துவப்படிப்பில் 1456 காலி இடங்கள் உள்ளது குறித்து மத்தியஅரசு மீது உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்து உள்ளது.
நாடு முழுவதும் உயர்நிலை மருத்துவ படிப்புக்காக நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதில் தேர்வு செய்யப்பட்டவர்கள், இடஒதுக்கீடுப்படி கல்லூரிகளில் இடம் ஒதுக்கப்பட்டு வருகிறது. அதன்படி மத்திய, மாநில அரசுகளுக்கு உரிய கோட்டாபடி இடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், மத்தியஅரசு ஒதுக்கீட்டில் பல இடங்கள் காலியாக உள்ளது. அதன்படி, நடப்பு கல்வியாண்டான 2021-22 அமர்வில் மருத்துவக் கல்லூரி களில் 1456 இடங்கள் காலியாக உள்ளது.
இந்த காலி இடங்களை மாநில அரசின் ஒதுக்கீட்டுக்கு வழங்க தமிழ்நாடு உள்பட பல மாநில அரசுகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், நாடு முழுவதும் மருத்துவர்கள் பற்றாக்குறை உள்ள நிலையில், ‘மருத்துவ கவுன்சிலும் மையமும் மாணவர்களின் வாழ்க்கையில் விளையாடுகின்றன’ என அதிருப்தி தெரிவித்ததுடன், மத்தியஅரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது.
இன்றைய விசாரணையின்போது, மத்தியஅரசு சார்பில் எந்தவொரு வழக்கறிஞரும் ஆஜராகாத நிலையில் உச்சநீதிமன்றம் மத்தியஅரசு மீது கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளது.
இன்றைய வாதத்தின்போத, உச்சநீதிமன்றம், ஏற்கனவே மே 9.ந்தேதி அன்று அன்று, NEET-SS (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) கவுன்சிலிங்கில் காலியாக உள்ள 940 இடங்களை நிரப்ப உச்ச நீதிமன்றம் ஒரு மாப்-அப் கவுன்சிலிங் சுற்றுக்கு உத்தரவிட்டது என்பதை சுட்டிக்காட்டி, அதுபோன்ற உத்தரவை அளிக்குமாறு மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறினார்.த்தை அணுகினர்.