சென்னை:
வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் ரேஷன் ஊழியர்களுக்கு சம்பளத்தை பிடிக்க கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது.

அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் இன்று முதல் வரும் ஒன்பதாம் தேதி வரை வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக நியாயவிலைக் கடை பணியாளர்கள் அறிவித்து இருந்தனர்.
இந்நிலையில், வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் ரேஷன் ஊழியர்களுக்கு சம்பளத்தை பிடிக்க கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து கூட்டுறவு துறை சார்பில் மண்டல இணைப்பதிவாளர்களுக்கு விடுத்துள்ள உத்தரவில், வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் ரேஷன் ஊழியர்களுக்கு சம்பளத்தை பிடிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel