காது கேட்காததை தெரிவிக்க புதிய வழி: இளம்பெண் அசத்தல்
காது கேட்காததை தெரிவிக்க புதிய வழி: இளம்பெண் அசத்தல்

டெல்லி:
 காது கேட்காதை வெளிப்படுத்த புதிய வழிமுறையை அறிமுகம் செய்த இளம் பெண்ணின் பதிவுக்கு சமூக வளைதளங்களில் பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது.
இயற்கையாகவே சிலருக்கு காது கேட்காமல் போய்விடும். இது அவர்கள் மீதான குறையல்ல. இது தெரியாமல் பலர் அவர்களிடம் மூச்சு முட்ட பேசி தீர்த்துவிடுவார்கள். பின்னர் காது கேட்காததை தெரிந்தவுடன், ‘‘ஸ்பீக்கர் அவுட்டா’’ என்று நக்கல் அடிப்பவர்களை தான் அதிகம் பார்த்திருக்கிறோம்.
காது கேட்காது என்பதை சிலர் வெளியில் சொல்லவும் வெட்கப்படுவர். ஆனால், இங்கே ஒரு பெண் தைரியமாக தனது காது கேட்காது என்பதை தெரிவிக்க நாகரீகமான மற்றும் நாசுக்கான வழியை காட்டியுள்ளார்.
அந்த பெண் தனது கேட்காத காதுக்கு பின்னால் ஸ்பீக்கர் போன்ற ஐகானை பச்சை குத்தி, அதன் அருகே ஸ்பீக்கர் மீயூட்டுக்கு போடும் சின்னத்தையும் பச்சை குத்தியுள்ளார். இதை புகைப்படம் எடுத்து பேஸ்புக் உள்ளிட்ட சமூக வளைதளங்களில் பதிவிட்டார்.
இந்த புகைப்படத்துக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. அதோடு வைரஸ் போல் இந்த புகைப்படம் பரவிட்டது.
இதில் அவர் கூறுகையில்,‘‘ எனக்கு ஒரு காது கேட்காது. இதை நல்ல முறையில் இந்த உலகத்துக்கு தெரிவிக்க இதுவே சரியான வழியாக எனக்கு தோன்றியது’’ என தெரிவித்துள்ளார்.
‘‘ ஏன் நீங்கள் மைக்ரோ போன் போன்றவற்றை பயன்படுத்தக் கூடாது’’ என்ற கேள்விக்கு இவர் பதில் கூறுகையில்,‘‘ மைக்ரோ போன் அணிந்திருந்தால் என்னிடம் பேசவே தயக்கம் காட்டுகின்றனர்’’ என தெரிவித்துள்ளார்.
இவரது புகைப்படத்தை பார்த்த பலர் தாங்களாகவே புது ஐகான்களை இது போன்று பச்சை குத்திக் கொண்டுள்ளனர். இந்த படங்களும் சமூக வளைதளங்களில் பரவிக் கொண்டிருக்கிறது.