சென்னை: சென்னையை அடுத்த வண்டலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் மேலும் 45 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. ஏற்கனவே 163 மாணவர்களுக்கு கொரோனா பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் அதிகரித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையை அடுத்த மேலக்கோட்டையூரில் (வண்டலூர் – கேளம்பாக்கம் சாலையில்) உள்ள விஐடி பல்கலைக்கழகத்தில்  படிக்கும் மாணவர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. வடமாநிலங்களில் இருந்து வந்த மாணவர்களால் தொற்று பரவல் வந்துள்ளதாக கூறப்படுகிறது.

விஐடி கல்லூரியில் மொத்தம் 5,670 மாணவ, மாணவிகள் பயின்று வரும் நிலையில், 3ஆயிரத்துக்கும்  மேற்பட்ட மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் நேற்றுவரை 163 பேருக்கு தொற்று உறுதியான நிலையில், இன்று மேலும் 45 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இதன்மூலம் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 208 ஆக உயர்நதுள்ளது.

கொரோனா பாதிக்கப்பட்ட மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கல்லூரியில் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர் நிர்வாகம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது