சென்னை:
மிழ்நாட்டை போதை பொருட்கள் இல்லாத மாநிலாமாக மாற்றுவதே முதலமைச்சரின் இலக்கு என்று அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

ஆண்டுதோறும் மே 31–ந்தேதி சர்வதேச புகையிலை எதிர்ப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி சென்னை,– சமூக ஆன்மிக அமைப்பான பிரஜாபிதா பிரம்ம குமாரிகள் ஐஸ்வர்ய விஷ்வ வித்யாலயாவும் குரோம்பேட்டை ரேலா மருத்துவமனையும் இணைந்து ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் போதையில்லா தமிழ்நாடு என்ற கருத்தை வலியுறுத்தும் வகையில் நடைபயணம் நிகழ்ச்சியை இன்று நடத்தின.

இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் மா சுப்ரமணியன், தமிழ்நாட்டை போதை பொருட்கள் இல்லாத மாநிலமாக மாற்ற வேண்டும் என்பதில் முதல்வர் மு.க ஸ்டாலின் முனைப்புடன் இருக்கிறார்.

100% போதை பொருட்கள் இல்லாத மாநிலமாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். அந்த வகையில் போதைப் பொருட்கள் விற்பதை அரசு தடை செய்துள்ளது. இதுதொடர்பாக மூவாயிரத்துக்கு மேற்பட்ட கடைகளுக்கு எச்சரிக்கை விடப்பட்டு 21 கடைகள் சீல் வைக்கப்பட்டு உள்ளன என்று தெரிவித்தார்.