20 ஆண்டுகளுக்கும் மேலாக அதிமுக-வில் உறுப்பினராக இருந்து வந்த மீசை சௌந்தரராஜன் அக்கட்சியில் இருந்து விலகி திமுக-வில் இணைந்துள்ளார்.
அஇஅதிமுக அலுவலகத்தில் எந்த ஒரு கொண்டாட்டமாக இருந்தாலும் முன்னணியில் நின்று கோஷம் போடுவதில் இருந்து பூசணிக்காய் சுற்றி உடைப்பது வரை அனைத்து வேலையும் செய்து அதிமுக கரை வேட்டிகளிடம் பரிச்சயமானவர் மீசை சௌந்தரராஜன்.

இவர் தற்போது தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்டு திமுக-வில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார்.
இன்று நடைபெற்ற கலைஞர் கருணாநிதி சிலை திறப்பு விழா நிகழ்ச்சிக்கு ஸ்டாலின் படத்துடன் திமுக கரைவேட்டியுடன் சௌந்தரராஜன் கலந்து கொண்டது அதிமுக-வினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Patrikai.com official YouTube Channel