டெல்லியில் உள்ள தியாகராஜ் ஸ்டேடியத்தில் மாலை 7 மணிக்கு மேல் பயிற்சியில் ஈடுபடுபவர்களை விரட்டியடித்துவிட்டு ஐ.ஏ.எஸ். அதிகாரி தனது நாயுடன் ஸ்டேடியத்தில் நடைபயிற்சி மேற்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக நாளிதழ்களில் வந்த செய்தியின் அடிப்படையில் மேற்கொண்ட விசாரணையில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளான சஞ்சீவ் கிர்வார் மற்றும் அவரது மனைவி ரிங்கு துக்கா ஆகியோர் தங்களது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியது தெரியவந்தது.

இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம் இவர்கள் இருவர் மீதும் நடவடிக்கை எடுத்ததுடன் அவர்களை பணியிடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது.

சஞ்சீவ் கிர்வாரை லடாக் பகுதிக்கும் அவரது மனைவி ரிங்கு துக்காவை அருணாச்சல பிரதேச மாநிலத்திற்கும் பணியிடமாற்றம் செய்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லியில் உள்ள மைதானங்கள் அனைத்தும் இரவு 10 மணி வரை விளையாட்டு வீரர்கள் பயிற்சி மேற்கொள்ள திறந்து வைக்க வேண்டும் என்று ஏற்கனவே உத்தரவிட்ட நிலையில் அதிகாரிகளின் இந்த பணியிடமாற்றம் உத்தரவு வெளியாகியுள்ளது.

ஸ்டேடியத்தில் பயிற்சி செய்பவர்களை வெளியேற்றிவிட்டு நாயுடன் நடை பழக செல்வதாக ஐ.ஏ.எஸ். அதிகாரி மீது குற்றச்சாட்டு… டெல்லி முதல்வர் அதிரடி…