சென்னை:
ல்வேறு திட்டங்களை துவக்கி வைக்க பிரதமர் நாளை சென்னை வருகை தருகிறார்.

ஒருநாள் பயணமாக சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் அமைக்கப்படும் விழா மேடையிலிருந்து பல்வேறு திட்டங்களை துவக்கி வைக்கிறார்.

எழும்பூா் ரயில் நிலையம் முழுமையாக உலகத்தரம் வாய்ந்த நிலையமாக மறு சீரமைப்பு செய்யப்படவுள்ளது. இதன்பொ­ருட்டு ரூ.760 கோடி மதிப்­பி­லான திட்­டப்­ப­ணி­க­ளுக்கு பிர­தமா் மோடி அடிக்­கல் நாட்­டு­கிறாா். இது­போல, மதுரை, காட்­பாடி, ராமே­சு­வ­ரம், கன்­னி­யா­கு­மரி ஆகிய ரயில் நிலை­யங்­களும் மேம்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளன. இவற்­றின் திட்­டப்­ப­ணி­க­ளை­யும் அவர் தொடங்­கி­வைக்­கிறாா்.

மதுரை-போடி­நா­யக்­கனூா் இடையே ரூ.450 கோடி செல­வில் 98 கி.மீ. தூர மீட்டா் கேஜ் பாதை, அகல ரயில்­பா­தை­யாக மாற்­றப்­பட்டு வரு­கிறது. இந்­தத் திட்­டத்­தில், மதுரை-தேனி வரை அகல ரயில் பாதைப் பணி­கள் முடிந்து அதி­வேக ரயிலை இயக்கி சோதனை நடத்­தப்­பட்­டது. இதை­ய­டுத்து, மதுரை-தேனி இடையே ரயில் சேவை தொடங்­க­வுள்­ளது.

இந்­தப் பாதையை பிர­தமா் மோடி நாட்­டுக்கு அா்ப்ப­ணிக்­கிறாா். தொடா்ந்து, இந்­தப் பாதை­யில் ரயில்­சே­வை­யும் அவர் தொடங்கி வைப்­பார். தாம்ப­ரம்-செங்­கல்­பட்டு 3-ஆவது ரயில் பாதை­யி­லும் அவர் ரயில் சேவை­யைத் தொடங்கி வைக்­கி­றார்.