சேலம்:
ந்தனக் கடத்தல் வீரப்பனின் சகோதரர் மாதையன் காலமானார்.

தென்மாநிலங்களில் போலீசாருக்கு சிம்ம சொப்பனமாக இருந்தவர் சந்தனக் கடத்தல் வீரப்பன். தமிழகம், கர்நாடகா, கேரளா மாநில போலீசாருக்கு 25 ஆண்டுகாலமாக கண்ணாமூச்சி காட்டி வந்த வீரப்பன். 2004-ம் ஆண்டு தமிழக அதிரடிப்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

வீரப்பனின் அண்ணன் மாதையன், பல்வேறு வழக்குகளில் போலீசாரால் தேடப்பட்டு வந்தார். இந்த நிலையில் 1987-ம் ஆண்டு மாதையன் கைது செய்யப்பட்டார். பின்னர் கர்நாடகா போலீசாரும் மாதையனை வழக்கு ஒன்றில் கைது செய்தது. இவ்வழக்குகளில் மாதையனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் மாதையனின் உடல்நலன் மிகவும் மோசமடைந்த நிலையில் சேலம் அரசு மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று மாதையன் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இத்தகவல் அவரது மனைவி மாரியம்மாள் மற்றும் உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.