சேலம்:
குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை இன்று திறக்கப்படுகிறது.

குறுவை சாகுபடிக்காக இன்று காலை 10 மணிக்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார். பின்னர் அணையில் இருந்து வெளியேறும் காவிரி நீர் மீது முதல்வர் ஸ்டாலின் மலர் தூவுகிறார்.

இதன் மூலம் டெல்டா மாவட்டங்களில் 16 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

வழக்கமாக ஜூன் 12ம் தேதி திறக்கப்படும் அணை இம்மாதம் முன்கூட்டியே நீர் திறக்கப்படுவதால் காவிரி பாசன விவசாயிகள் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர்.