ரியாத்: புதிய வகை கொரோனா பாதிப்பு காரணமாக, இந்தியா உட்பட 16 நாடுகளுக்கு பயணம் செய்ய சவுதி அரேபியா தடை விதித்துள்ளது.

அதன்படி, சவுதி மக்கள் இந்தியா உள்பட லெபனான், சிரியா, துருக்கி, ஈரான், ஆப்கானிஸ்தான், ஏமன், சோமாலியா, எத்தியோப்பியா, காங்கோ ஜனநாயக குடியரசு, லிபியா, இந்தோனேசியா, வியட்நாம், ஆர்மீனியா, பெலாரஸ் மற்றும் வெனிசுலா உள்பட 16 நாடுகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
சமீப நாட்களாக குறிப்பிட்டுள்ள நாடுகளில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், அதை கவனத்தில் கொண்டு, இந்தியா உள்ளிட்ட 16 நாடுகளுக்கு பயணம் செய்ய தனது குடிமக்களுக்கு சவுதி அரேபிய அரசு தடை விதித்து உள்ளது. இதை சவுதி அரேபிய சுகாதார அமைச்சகம் பொதுமக்களுக்கு உறுதிப்படுத்தி உள்ளது.
Patrikai.com official YouTube Channel