சென்னை: பெட்ரோல் டீசல் மீதான வரியை குறைக்காவிட்டால் கோட்டையை முற்றுகையிடுவோம் என தமிழகஅரசுக்கு எச்சரிக்கை விடுத்த மாநில பாஜக தலைவர் அண்ணாமலைக்கு, அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பகிரடஙகமாக மிரட்டல் விடுத்துள்ளார்.  அண்ணாமலை சொந்த ஊரை தாண்ட முடியாது என கூறியுள்ளார்.

மத்தியஅரசு பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைத்துள்ளது. ஆனால், தமிழகஅரசு அதுகுறித்து ஏதும் தெரிவிக்கவில்லை. ஏற்கனவே கடந்த தீபாவளி சமயத்திலும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டபோது, தமிழகஅரசு பெட்ரோல், டீசல் விலையை குறைக்க முன்வரவில்லை. அதுபோல திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டதுபோல, பெட்ரோல், டீசல் விலையை குறைக்காமல் பெட்ரோலுக்கு மட்டுமே ரூ.3 குறைத்தது. இது வாகன ஒட்டிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டபடி,   72 மணி நேரத்தில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்கவில்லை எனில் கோட்டையை முற்றுகை யிடுவோம் என்ற பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் பேசியிருந்தார். இது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளார். இது திமுக ஆட்சி. சொன்னதை செய்து காட்டியவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். உங்களது மிரட்டல்களுக்கு திமுக அஞ்சாது.கர்நாடகத்தில் உள்ள அரசுக்கு சல்யூட் அடித்த அண்ணாமலை சொந்த ஊரான கரூர் மாவட்டத்தையே தாண்ட முடியாது என பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளதுடன், கர்நாடகாவில் இருந்து காவிரி நீரைத் தமிழகத்துக்கு கொடுக்கக் கூடாது என பேசிய அண்ணாமலை, தற்போது தமிழகத்துக்கு என்ன செய்யப் போகிறார். மதக்கலவரத்தை உருவாக்க பார்க்கிறார். இது திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி. சவாலுக்கு பயப்பட மாட்டோம்-எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் என்று கூறியுள்ளர்.

அமைச்சரின் பகிரங்க மிரட்டல் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.