ண்டன்

டாக் மற்றும் உக்ரைனில் நடைபெறும் ஆக்கிரமிப்புக்கள் குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்விகள் எழுப்பி உள்ளார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தற்போது லண்டனில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.   அதில் ஒரு பகுதியாக லண்டனில் ஒரு மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றி உள்ளார். ராகுல் காந்தி தனது உரையில் மத்திய பாஜக அரசுக்கு சரமாரியாகக் கேள்விகள் கேட்டு கண்டனம் தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தி தனது உரையில், “இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையிலான போர் ரஷ்யா – உக்ரைன் போரைப் போன்றது ஆகும். நாம் உக்ரைனில் என்ன நடக்கிறது? லடாக்கில் என்ன நடக்கிறது? என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். ரஷ்ய உக்ரைன் மண்ணைக் கைப்பற்ற ரஷ்யா தாக்குதல்களை நடத்தி வருவதை போல் சீனாவும் இந்திய மண்ணை கைப்பற்ற முயல்கிறது.

மத்திய பாஜக  இந்தப் பிரச்சினையைப் பற்றிப் பேச விரும்பவில்லை. மாறாக அங்கு எந்த குழப்பமும் நடக்கவில்லை என்கின்றனர்.  சீனா இந்திய மண்ணில் அமர்ந்திருக்கிறது.  அது போல் உக்ரைனில் ரஷ்யா அமர்ந்துள்ளது.  இந்தியா இந்த சிக்கலான சூழ்நிலையைச் சமாளிக்க வேண்டும்.

அதை விடுத்து மேலோட்டமாக சிந்திப்பதால் எதுவும் நடக்காது.  பாஜக அரசால், ஒவ்வொரு நிறுவனமும் ஆக்கிரமிக்கப்பட்டு ஒவ்வொரு நிறுவனமும் தாக்கப்படுகிறது.  பாஜகவும், அதன் சங்பரிவார் அமைப்புகளும் இந்தியாவை புவியியல் அமைப்பாகப் பார்க்கின்றன.  காங்கிரஸ் கட்சி இந்தியாவானது மக்களால் ஆனது என்று கருதுகிறது.

பிரதமர் மோடியின் பாஜக அரசில் மக்களுக்கு வேலை கிடைக்கவில்லை. மேலும் சிறு தொழில்கள் அனைத்தும் பாஜக அரசால் தாக்கப்பட்டுள்ளன.  இதற்குப் பணமதிப்பிழப்பு , ஜிஎஸ்டி மற்றும் விவசாய சட்டமாக என பல இனங்கள் உள்ளன’ எனத் தெரிவித்துள்ளார்.