சென்னை: தமிழ்நாட்டில் ஒருவருக்கு ஒமிக்ரான் பிஏ-4 வகை கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதாக தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார்.
தமிழ்நாட்டில் நேற்று மேலும் 37 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 34,54,801 ஆக உயர்ந்துள்ளது. ஆனால், கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக கொரோனா உயிரிழப்பின்று, தொற்று பாதிக்கப்பட்டவர்கள் குணமடைந்து வருகின்றனர். தொற்று பாதிப்பு காரணமாக இதுவரை 38,025 பேர் உயிர் இழந்துள்ளனர்.இதுவரை 34,16,461 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது மாநிலம் முழுவதும் 315 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் ஒருவருக்கு ஒமிக்ரான் பிஏ-4 வகை தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் நாவலூரில் புதிய வகை கொரோனா பரவியது கண்டுபிடிக்கப்பட்டதாகவும், புதிய வகை கொரோனா பரவும் தன்மை கொண்டது இல்லை இதுகுறித்து தகவலறிந்ததும், தமிழக மருத்துவத் துறைச்செயலர் இரவேதொற்று பாதிக்கப்பட்டவரை நேரில் சந்தித்து விசாரித்தார். தற்போது, அவர் நலமுடன் உள்ளார். நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துவிட்டார். அவருடன் தொடர்பிலிருந்த எவருக்கும் தொற்று பரவவில்லை என்பதையும் உறுதி செய்துள்ளார் என்று கூறினார்.
“இந்தியாவில் கடந்த வியாழக்கிழமை பிஏ-4 வகை ஒமிக்ரான் தொற்று ஹைதராபாத்தில் கண்டறியப்பட்ட நிலையில், தமிழ்நாட்டிலும் ஒருவருக்கு தொற்று கண்டறியப்பட்டு, குணமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.