தமிழ்நாட்டில் இன்று மொத்தம் 12 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் 23, செங்கல்பட்டில் 5, காஞ்சிபுரம் 2 மற்றும் திருவள்ளூர் 3 வருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்திருக்கிறது.

கோவையில் 2 பேருக்கும் கடலூர், தருமபுரி, ஈரோடு, கன்னியாகுமரி, நீலகிரி, சேலம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

இன்று மொத்தம் 15,486 பேருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் 27 ஆண்கள் 15 பெண்கள் என மொத்தம் 42 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

41 பேர் இன்று குணமடைந்த நிலையில் 322 பேர் இன்னும் சிகிச்சையில் உள்ளனர்.