சண்டிகர்: சாலை விபத்து வழக்கில் பஞ்சாப் மாநில முன்னாள் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவுக்கு 34 ஆண்டுகளுக்குப் பின்னர் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பஞ்சாப் மாநில முன்னாள் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து கடந்த 1987 ஆம் ஆண்டு நிகழ்ந்த சாலை விபத்தில், முன்னாள் கிரிக்கெட் வீரரும், பஞ்சாப் மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவருமான சித்துவுக்கு நீதிமன்றம் 3 ஆண்டு சிறை தண்டனை வழங்கியது. இந்த உத்தரவை எதிர்த்து, நவ்ஜோத் சிங் சித்து உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், சித்துவுக்கு ஓராண்டு சிறையும், ரூ.1000 அபராதும் விதித்து கடந்த 2018ம் ஆண்டு உத்தரவிட்டது.
இதை எதிர்த்து, பாதிக்கப்பட்ட குர்னாம் சிங்கின் குடும்பத்தினர் உச்சநீதிமன்றத்தில் மறுஆய்வு மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை நீதிபதிகள் ஏஎம் கன்வில்கர் மற்றும் சஞ்சய் கிஷன் கவுல் ஆகியோர் கொண்ட பெஞ்ச் விசாரித்து வந்தது. விசாரணையைத் தொடர்ந்து, “தண்டனைப் பிரச்சினையில் மறுஆய்வு மனுவை நாங்கள் அனுமதித்துள்ளோம். விதிக்கப்பட்ட அபராதத்துடன் கூடுதலாக, பிரதிவாதி 1 (சித்து) க்கு ஒரு வருடம் சிறைத்தண்டனை விதிக்கிறோம் என்று உத்தரவிட்டு உள்ளது. சாலை விபத்து வழக்கில் 34 ஆண்டுகளுக்குப் பின்னர் நவ்ஜோத் சிங் சிந்துவுக்கு சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.