பியோங்யாங்

டகொரியாவில் கொரோனா பரவல் அதிகரிப்பையொட்டி 10000 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கடந்த 2 ஆண்டுகளாக உலகம் முழுவதையும் கொரோனா உலுக்கி வந்த நிலையிலும் வட கொரியாவில் ஒருவருக்குகூட பாதிப்பு ஏற்படவில்லை சமீபத்தில்  வடகொரியாவில் முதல் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.  இதையொட்டி நாடு முழுவதும் அவசர நிலை அறிவிக்கப்பட்டு ஊரடங்கு கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தி வருகின்றது.

தற்போது வடகொரியாவில் கண்டறியப்பட்டுள்ளது ஒமைக்ரான் வைரஸ் என்று கூறப்படுகிறது. முதலில்  சீனாவுடனான வர்த்தக உறவினால் இந்த கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்று கூறப்பட்டு வந்த நிலையில் சமீபத்தில் நடந்த பிரமாண்ட ராணுவ அணிவகுப்பின் மூலமாகவே கரோனா பரவியுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  இங்கு கடந்த ஏப்ரல் 25 ஆம் தேதி ஆண்டு விழாவை முன்னிட்டு மிகப் பெரிய ராணுவ அணிவகுப்பை நடத்தியது.

ஆனால் அணிவகுப்பில் எந்தவித சமூக இடைவெளியும் பின்பற்றப்படவில்லை.   இந்நிலையில் கொரோனாவுக்கு ஒருவர் பலியாகி இருப்பதாகவும் வடகொரியா தெரிவித்துள்ளது. எனவே கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஒரு அங்கமாக வடகொரியாவில் சுமார் 10,000 பேர்வரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கொரோனா பரவல் குறித்து வடகொரிய பல்கலைக்கழக பேராசிரியர் யாங் மூ ஜின் கூறும்போது, “வட கொரியாவுக்குள் கொரோனா வைரஸ் மூன்று வழிகளின் மூலமே நுழைந்திருக்க முடியும்.. அவற்றொ; ஒன்று ரயில்பாதை வழியாக , இரண்டாவது கடல் வாணிகம், மூன்றாவது கடத்தலில் ஈடுபட்டவர்கள் மூலம் ஆகும்.மொத்தத்தில் கொரோனா வைரஸ் சீனாவிலிருந்தே பரவியுள்ளது” என்று தெரிவித்துள்ளார்