சென்னை: சென்னை உள்பட பல மாவட்டங்களில் அடுத்த சிலமணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
கோடை வெயிலை குளிர்விக்க வந்த அசானி புயல் வலுவிழந்து ஆந்திரபிரதேச மசூலிப்பட்டினம் அருகே கரையை கடந்த நிலையிலும், தமிழகத் தில் அவ்வப்போது மழையும், சாரலுமாக குளிர்ச்சியான காலநிலையே தொடர்கிறது.
இந்த நிலையில், தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இன்று (13ம் தேதி) இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட 18 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என தெரிவித்து உள்ளது.
மேலும், தமிழ்நாடு புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை நீலகிரி, கோவை ,திருப்பூர் ,தேனி ,திண்டுக்கல் ,ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வருகிற 16ம் தேதி வரை மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.