சென்னை : தமிழ்நாட்டில் மே 10ந்தேதி (நேற்று) பிளஸ் 1 தேர்வு தொடங்கிய நிலையில், முதல் நாளே, சுமார் 43 ஆயிரம் பேர் தேர்வு எழுத வரவவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இது ஆசிரியர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த இரு ஆண்டுகளாக நேரடித்தேர்வுகள் நடத்தப்படாத நிலையில், இந்த ஆண்டு பள்ளி, கல்லூரிகளில் நேரடித் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, 10வது, 11வது, 12வது வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. ஏற்கனவே 12வது மற்றும் 10வது வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்கியுள்ள நிலையில், நேற்று 11ம் வகுப்புகளுக்கு (பிளஸ்-1) பொதுத்தேர்வு தொடங்கியது. இந்த தேர்வு, வருகிற 31-ந்தேதி முடிவடைகிறது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ்1 பொதுத்தேர்வை எபத 8 லட்சத்து 85 ஆயிரத்து 53 மாணவ மாணவியர் பதிவு செய்துள்ளனர். தமிழகத்தில் மட்டும் 8 லட்சத்து 69 ஆயிரம் மாணவ மாணவியர் பதிவு செய்துள்ளனர். புதுச்சேரியில் இயங்கும் பள்ளிகளில் இருந்து 15ஆயிரத்து 145 மாணவ மாணவியர் பதிவு செய்துள்ளனர் அவர்களில் 4 லட்சத்து 26 ஆயிரத்து 917 பேர் மாணவர்கள். 4 லட்சத்து 42 ஆயிரத்து 989 பேர் மாணவியர். மூன்றாம் பாலினத்தவர்கள் 2 பேரும் தேர்வு எழுத பதிவு செய்துள்ளனர். மேலும், தனித் தேர்வர்களாக தேர்வு எழுத 5 ஆயிரத்து 673 மாணவ மாணவியர் பதிவு செய்துள்ளனர். மாற்றுத் திறனாளிகள் 5 ஆயிரத்து 299 பேர் பதிவு செய்துள்ளனர். சிறைவாசிகள் 99 பேரும் பதிவு செய்துள்ளனர்.
பிளஸ்1 பொதுத்தேர்வுக்காக மாநிலம் முழுவதும் 3119 தேர்வு மையங்கள் அ மைக்கப்பட்டுள்ளன. தனித் தேர்வர்களுக்காக 115 தேர்வுமையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதுதவிர சிறைத் தேர்வு மையங்கள் 9அமைக்கப்பட்டுள்ளன. கண்காணிப்பு பணியில் 47315 ஆசிரியர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர். பறக்கும் படையினர் 3050 உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், முதல் நாளான நேற்று நடைபெற்ற பிளஸ் 1 தேர்வில், , 43 ஆயிரம் பேர், ‘ஆப்சென்ட்’ ஆகியுள்ளதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்து உள்ளது.
நேற்று தொடங்கிய பிளஸ்2 பொதுத் தேர்வில் 32,674 பேர் ஆப்சென்ட்!